6
.நிலவின்
எதிரொலி
சு.வில்வரெத்தினம்
அகதிகளாய்
அங்கவை சங்கவை:
பாரி
ஆண்ட பறம்புமலையை மூவேந்தர்கள் கைப்பற்றி, பாரியையும்
வீழ்த்தி விட்டனர். சூரியன் மறைந்த இருளில் அகதிகளாய் ஆதரவற்றவர்களாய்
ஆகினர் பாரிமகளிர்.
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்.
பாரிமகளிரின்
சோகம்:
பல
வெற்றிகளைக் கண்ட முரசு வீழ்ந்த கையோடு, பாரிமகளிர்க்குப்
பறம்புமலை வாழ்வும் இனி இல்லை என்றானது.
அதனால் பாரிமகளிர் மலையிலிருந்து நிலவின் வெளிச்சம்
சோகமாய் படர்கின்ற ஒற்றையடிப் பாதையின் வழியே இறங்கி தளர்வுற்று நடந்தனர்.
அவர்களுடன் தள்ளாத வயதில் கபிலரும் துணையாக நடந்துசென்றார். இளைத்து,
சோர்ந்து நரைவிழுந்து போனது வெண்ணிலவும்தான் கபிலரைப் போல.
நரைவிழுந்து
போனது
வெண்ணிலவும்தான்
கபிலரும்தான்
பாரிமகளிரும்தாம்
பறம்பு மலை வாழ்வும்தான்.
வாழ்வினை
இழந்த மகளிரை ஒளவையாரிடம் பவ்யமாக ஒப்படைத்துவிட்டு கபிலர் மறைந்தார்.
அவர்களின் பயணம் மேலும் தொடர்ந்தது. போகும் வழியெல்லாம்
ஒளவையுடன் கூழ், கஞ்சி குடித்தே சென்றனர் பாரியின் மகளிர்கள்.
அவர்களுடன் நிலவும் பயணித்தது.
ஒளவையின்
அவசரம்:
அதியமான்
கொடுத்த அதிசய நெல்லிக்கனி அளித்த ஆயுட்காலம் முடிவிற்கு வந்ததோ?
ஒளவை அவசரப்பட்டு அவளைப் போல் தமிழ் ஆற்றல் படைத்த மகளிரை, பாரியையும் அவர்கள் வாழ்ந்த பறம்புமலை
வாழ்வையும் அழித்தவர்க்கே மணம் முடித்துவிட்டாள்.
தன்னைப்போல் தமிழ்செய்த மகளிரைப்
பறம்பு மலை வாழ்வை அழித்தவர்க்கே
தாரை வார்த்துக் கொடுத்தாள்.
அடிமைவாழ்வு:
காலம்
கடந்திருந்தாலும் கூழோ, கஞ்சியோ வார்க்கும்
தம்முடைய இனக்குடியில் கொடுத்திருந்தாலும் பாரியின் ஆன்மா மகிழ்ச்சியடைந்திருக்கும்
.
அந்த
நிலாநாளில் பறம்புமலையும், வெற்றிதரக்கூடிய முரசும்,
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட அங்கவையும் சங்கவையும் வருத்தப்பட்டு
அழுதவை எல்லாம் இந்த நிலாநாளிலும் எதிரொலிக்கவே செய்கின்றன.
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.
முடிவுரை:
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் பாரியின் மகளிர் அகதிகளாய் அலைந்து திரிந்த வரலாறு இன்றும் மாறியதாகத்
தெரியவில்லை. இன்றும் எல்லா நாடுகளில் இருந்தும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டவர்களின்
வரலாறு தொடர்ந்து கொண்டிருப்பதாக இந்த கவிதை முன்வைக்கின்றது.
No comments:
Post a Comment